Powered By Blogger

Thursday, March 10, 2011

sirippu dassu

லோக்சபா தேர்தல் முடிந்ததும் சட்டசபை தேர்தல்* ராமதாஸ் ஆரூடம்
மே 10,2009,00:00 IST

Latest indian and world political news information

ஆத்தூர்:""மின் உற்பத்திக்கு தரமற்ற நிலக்கரியை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் ஊழல் செய்து வருகின்றனர்,'' என ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் தன்ராஜை ஆதரித்து ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியது:


கள்ளக்குறிச்சி தொகுதியில் வேட்பாளர் தன்ராஜ், மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழகத்தில் மூன்றாண்டு நடந்த ஆட்சியில் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல் என கொள்ளையடித்து பணம் சேர்த்து வந்தனர்.அப்போது நான் நாள்தோறும் பத்திரிகைகள் மூலம் குறைகளை சுட்டி காட்டி வந்தேன். அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின்சாரத்திற்கு விடுமுறை அளித்ததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.


2001-06 அ.தி.மு.க., ஆட்சி காலத்தில 1,500 மெகாவாட் மின்சாரம் உபரியாக இருந்தது. அது கர்நாடக, கேரள மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.தற்போது, 1,500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. மின் உற்பத்திக்கு தரமற்ற நிலக்கரியை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் ஊழல் செய்து வருகின்றனர்.கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியதால், மக்கள் நமக்கு ஓட்டு போட்டு விடுவர் என தி.மு.க.,வினர் நினைக்கின்றனர்.


ஓட்டு எல்லாம் போட மாட்டர்; வாய்க்கரிசி தான் போடுவர். தி.மு.க., படுத்து நான்கு, ஐந்து நாள் ஆகிவிட்டது.ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதி சினிமா வசனம் போன்று, "ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என எழுதுவார். ஆனால், ஏழைகள் யாரும் சிரிக்கவில்லை. தமிழகத்தில் சாராய வெள்ளம் ஆறாக பாய்ந்தும், ரவுடிகளின் அட்டகாசம் தொடர்கிறது.


இலங்கைத் தமிழர்களை ராணுவம் கொன்று குவிப்பதற்கு மத்திய அரசும், முதல்வர் கருணாநிதியும் உடந்தையாக செயல்படுகின்றனர். வைகோ, ராமதாஸ் 100 கி.மீ., வேகத்தில் சென்றால், ஜெயலலிதாவோ 200 கி.மீ., வேகத்தில் சென்று, "தனி ஈழம் அமைப்போம்' என, தெரிவித்துள்ளார். இத்தேர்தல் முடிந்ததும் சட்டசபை தேர்தல் வரும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments:

Post a Comment