காங்.,க்கு டிபாசிட் கிடைக்க கூடாது: ராமதாஸ்
ஏப்ரல் 30,2009,00:00 IST
Latest indian and world political news information
திருப்புத்தூர்:தமிழகத்தில் 17 இடங்களிலும் காங்.,க்கு டிபாசிட் கிடைக்கக் கூடாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திருப்புத்தூரில் அ.தி.மு.க.,வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்துப் பிரசாரக் கூட்டம் நடந்தது. ராமதாஸ் பேசியதாவது:
நாட்டின் இரு பெரும் துறைகளில் இருந்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கும், தொகுதிக்கும் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளத்தின் போது முதல்வர் கருணாநிதி 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், 200 கோடி தான் ஒதுக்கப்பட்டது. சிதம்பரம் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை.ஜெ., முதல்வராக இருந்த போது வெள்ளத்தின் போது 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
தர்மபுரியைப் போல மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி சிவகங்கை. வேலு ரயில்வே அமைச்சராக இருந்து நடவடிக்கை எடுத்து சிவகங்கையில் அகலப்பாதையாக்கினார். உலகமயமாக்கலைப் பின்பற்றியதால் பொருளாதாரம் சீரழிந்தது. 17 இடங்களிலும் காங்., டிபாசிட் வாங்கக் கூடாது.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment