எல்லா அக்கிரமத்திற்கும் ஒரு முடிவு மொத்தமாக வரும். ஜெயலலிதாவின் நாசகார ஆட்சிக்கு இந்த தேர்தலோடு முற்றுப்புள்ளி விழுந்து விடும். நான் ஆட்சிக்கு மட்டும் சொல்லவில்லை. ஜெயலலிதாவுக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி விழப் போகிறது.
(19.4.2004 திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு)
வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலில் நம் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். இதற்காக நீங்கள் பாடுபடுங்கள்.
(9.4.2009 சென்னை பொதுக்குழுவில் வைகோ பேச்சு)
தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணி தேர்தலுக்காக மட்டுமல்ல; பெரியார் விட்டுச் சென்ற கொள்கைகளை மீட்க தொடர்ந்து நிலைக்கும். இந்த தேர்தலுக்குப் பின் பல தேர்தல்கள் வரலாம். சட்டசபை தேர்தலிலும் கூட்டணி இருக்கும். பா.ம.க., இல்லை என்றாலும் பரவாயில்லை. கட்சியில் ஒருவன் கூட இல்லை என்றாலும் பரவாயில்லை. இனி அ.தி.மு.க.,வுடன் சாகும் வரை கூட்டணி இருக்காது.
(1.5.2004 விழுப்புரம் செயல் வீரர்கள் கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு)
அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்துள்ள நாங்கள் நாகரிகமாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி தர்மத்தை பா.ம.க., முழுமையாக கடைபிடிக்கும். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் பா.ம.க.,வினர் மூன்று மடங்கு கடுமையாக பணியாற்றுவர்.
(27.3.09 பா.ம.க., தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேட்டி)
No comments:
Post a Comment