ஜெயலலிதாவால் தான் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும்*ராமதாஸ் சர்டிபிகேட்
மே 07,2009,00:00 IST
Latest indian and world political news information
திருத்தணி:""இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என உலகத் தமிழர்கள் கடிதம் எழுதியுள்ளனர்'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.திருத்தணியில் பா.ம.க., வேட் பாளர் வேலுவை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அரி தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
டந்த 40 வருடங்களாக முதல்வர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்னையில் நாடகம் போட்ட வேஷங்கள் ஏராளம். உலக தமிழர்களுக்கு தான் தலைவர் என அவர் மார்தட்டிக் கொள்கிறார். ஆனால், இவர் தனது குடும்ப தொலைக் காட்சியில் தமிழை குத்தகைக்கு விட்டு சீரழித்து வருகிறார்.தமிழர்களுக்கு தனி ஈழம் பெற்றுத் தருவேன் என ஜெயலலிதா கூறுகிறார். தமிழ் ஈழம் தனியாக பெற்றுக் கொடுத்தால் சீன மக்கள் சும்மா இருப்பார்களா? என கருணாநிதி அவர்களை உசுப்பு ஏற்றுகிறார்.
இலங் கை தமிழர்கள் பிரச்னைக்காக கருணாநிதி உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு காலையில் 6 மணிக்கு டிபன் சாப்பிட் டார்.மதிய உணவுக்கு முன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போர் நிறுத்தம் முடிந்த பிறகு 272 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறித்து கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கருணாநிதி "மழை விட்டது; தூவானம் விடவில்லை' என கவிதை பாடியுள்ளார்.
தி.மு.க., என்பது ஒரு கட்சியே கிடையாது. நாங்கள் மூன்று ஆண்டுகள் தி.மு.க., கூட்டணியில் இருந்த போது கூட மக்கள் நலனுக்காக அரசு எதிர்த்து பல் வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதனால் என்னை கூட்டணிக்கு துரோகம் செய்பவர் என்றும் ராமதாஸ் ஒரு கொடுமைக்காரர் என கருணாநிதி வசை பாடினார். இலங்கை பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க இந்தியாவில் ஜெயலலிதா ஒருவரால் தான் முடியும் என தென் ஆப்ரிக்க தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர், சுவிட்சர்லாந்து தமிழர்கள் அனைவரும் கடிதம் எழுதியுள்ளனர். கருணாநிதிக்கு முத்தமிழ் வித்தகர் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். அவர் முத்தமிழையும் விற்றவர் என ஜெயலலிதா கூறியது சரி தான்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment