Powered By Blogger

Thursday, March 10, 2011

அரசியல்

ராமதாஸ் படித்த பள்ளியில் நான் வாத்தியார் *நாகையில் அமைச்சர் அன்பழகன் பேச்சு
மே 08,2009,00:00 IST

Latest indian and world political news information

நாகப்பட்டினம்: பா.ம.க., விலகியதால் தி.மு.க., கூட்டணியினர் நிம்மதியாக இருக்கிறோம் என அமைச்சர் அன்பழகன் பேசினார்.நாகை தொகுதி தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து நேற்று அவர் பேசியதாவது:ஐந்து முறை கருணாநிதி முதல்வராக இருந்ததால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அடித்தட்டு மக்களுக்காக உழைத்து வளர்ந்த இயக்கம் தி.மு.க.,


தாழ்த்தப்பட்ட, இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளில் அதிக கூட்டம் நடத்திய கட்சி தி.மு.க., மட்டுமே.நஞ்சை நிலத்தில் குடியிருந்தாலும் கூட ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் திட்டத்தால் தங்கள் பசி நீங்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இத்திட்டத்தால் அரசுக்கு 1,750 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.


சில மாநிலங்களில் பா.ஜ., செல்வாக்கு பெற்றதால் மதக்கலவரங்கள் ஏற்பட்டது. விளைவு பாபர் மசூதி இடிப்பு. அதற்காக அன்று முதல்வராக இருந்த ஜெ., ஆயிரம் பேரை கரசேவைக்காக அனுப்பி வைத்தார்.முதல்வருக்கு உடல்நலக்குறைவு நீங்கி விட்டாலும், பலவீனம் நீங்கவில்லை எனவே "டிவி'யில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ராமதாஸ் எங்களை விட்டு விலகிப்போனதற்காக நாங்கள் கண்டிக்கவில்லை. மாறாக எங்கள் கூட்டணித் தொண்டர்கள் நிம்மதியாக உள்ளோம். தேர்தல் முடிந்து டில்லியில் ஆட்சி அமைத்து மூன்று மாதத்தில் தி.மு.க., அரசை கலைக்கப் போவதாக ராமதாஸ் கூறுகிறார். தி.மு.க., ஆட்சி அமைக்கும் போது, மற்றவர்களை விட கருணாநிதியை அதிகமாக புகழ்ந்து தனது மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கினார். தற்போது அதிக இடம் கேட்டார். ஏற்கனவே கொடுத்த இடம் தான் கொடுப்போம் என்றதால், அவர் சென்றார்.


அவர் சென்றதால் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.நிழல் பட்ஜெட் தயாரிக்கும் அவர், நிழல் நிஜமாகிவிட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராமதாஸ் படித்த பள்ளியில் வாத்தியாராக இருந்தவன் நான் என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.

No comments:

Post a Comment