Powered By Blogger

Thursday, March 10, 2011

அரசியல்

'பெரிய பணக்காரர் கருணாநிதி; அந்த இடத்தை பிடிக்க ஜெயலலிதா முயற்சி'
ஏப்ரல் 26,2009,00:00 IST

ஊத்தங்கரை : ""எனக்கு வாய்ப்பு கொடுத்தால், வறுமையை ஒழிப்பேன்,'' என விஜயகாந்த் தெரிவித்தார். ஊத்தங்கரை ரவுண் டானாவில் விஜயகாந்த் பேசியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு குழி பறித்து வருகின்றன. வறுமை இது வரையில் ஒழிக்கப்படவில்லை. ஹெலிகாப்டரில் பறந்து பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் பிரச்னை எப்படி தெரியும். நான் உங்களை தேடி வந்துள்ளேன். தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு அவர்கள் மட்டும் உயர்ந்துள்ளனர்; மக்கள் உயர்வடையவில்லை.


தமிழகத்தில் மிகப் பெரிய பணக்காரராக கருணாநிதியுள்ளார். அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என ஜெயலலிதா முயற்சிக்கிறார். இருவர் ஆட்சியிலும் ஊழல் பெருகி விட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் வறுமையை ஒழிக்க முடியாத இவர்கள் எதற்கு? நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன். மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதியில் என் கட்சிக்காரர்களால், போஸ்டர் கூட ஒட்ட முடிய வில்லை. போலீசார் ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளனர். எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு கரன்ட்டுக்கு லீவு விடப்பட்டு வருகிறது.


மத்திய அமைச்சர் சிதம்பரம் வங்கியில் கடன் கிடைக்கும் எனக் கூறினார். ஆனால், ஏழைகளுக்கு இது வரையில் கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களை அவர்களது கட்சிக்காரர்கள் தான் அனுபவித்து வருகின் றனர்; அதிலும் கொள்ளை. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லாம் நாடகம் ஆடி வருகின்றனர். இலங்கையில் ஒரு இனமே அழிந்து வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து, வறுமையை ஒழிக்க முடியும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment