Powered By Blogger

Thursday, March 10, 2011

அரசியல்

பிரதமர் வேட்பாளர் ஜெ.,! கூறுகிறார் வைகோ
மே 02,2009,00:00 IST

Latest indian and world political news information

காரைக்குடி:பிரதமர் வேட்பாளராக ஜெ.,க்கு தகுதி உள்ளதாக ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சிவகங்கை தொகுதிஅ.தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பனை ஆதரித்து காரைக்குடியில் நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ பேசியதாவது: இத்தேர்தலில் மாநில கட்சிகள் தான் பிரதமரை தீர்மானிக்கும். பிரதமர் வேட்பாளராக ஜெ.,விற்கு தகுதி உண்டு. ப.சிதம்பரத்தின் கொள்கையால் இந்திய பொருளாதாரம் பாதித்தது.


நிர்வாக சீர்கேடு: கர்நாடகா தேர்தலுக்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கைவிட சொன்ன சோனியாவிடம் தமிழர்களின் நலனுக்காக ப.சிதம்பரம் தட்டிக்கேட்டதுண்டா. கேரளாவிலிருந்து 2,000 டி.எம்.சி.,தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் காங்., நடுநிலையுடன் இருக்க அவர் வலியுறுத்தினாரா. கேரளாவில் மணல் எடுக்க அனுமதி யில்லை. தமிழக ஆறுகளில் மணல் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.


ஜெ.,ஆட்சியில் 10,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. தி.மு.க.,அரசின் நிர்வாக சீர்கேட்டால் 7,500 மெகாவாட் ஆக குறைந்துவிட்டது.ப.சிதம்பரம் நிதி: இலங்கையில் ஐந்து ஆண்டுகளாக தமிழர்களை கொன்று குவிக்க ஆயுதம் வழங்கியதே ஐ.மு.,கூட்டணி அரசு தான். சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தான் இலங்கைக்கு மத்திய அரசு வட்டியில்லா கடன் தந்தது. அப்பணத்தில் பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலில் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கின்றனர்.


உள்துறை அமைச்சர் சிதம்பரம் 48 மணிநேரம் போர் நிறுத்தம் என அறிவித்தார். அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த 7,000 பேரில் 2,800 பேரை கொன்றனர். இலங்கை அரசிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்தியது உண்டா. அதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் . இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment