Powered By Blogger
Showing posts with label News Around World. Show all posts
Showing posts with label News Around World. Show all posts

Saturday, September 25, 2010

கழுத்தையும் நெரிக்கும் கசகசா

எச்சரிக்கை
கழுத்தையும் நெரிக்கும் கசகசா

பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!

'மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு
சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு? சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார். அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள். இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!'
- இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!
சென்னை செய்த எச்சரிக்கை!
முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை! இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.
சிக்கன், மட்டன், சிறை!
கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.
'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான்.
இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.
உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.
ஸ்டார் பார், குளிர்பான கிக்!
இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.
கசகசா ஏன் கதி கலக்குது?

உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

Tuesday, September 21, 2010

தஞ்சை பெரிய கோவில்: கலை, வரலாற்று களஞ்சியம்

தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.

""செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமானன் இராஜசர் வக்ஞன்,'' என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், திருவிடந்தை, திருநந்திக்கரை, கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க, தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்!

தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீரில் ஏலக்காய், செண்பக மொட்டுகள் போடப்பட்டு, மிகுந்த நறுமணத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது.ராஜராஜ சோழனால் பலத் திருக்கோவில்கள் கட்டப் பெற்றன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைச்சிறந்த, ஒப்பற்ற கோவிலாகத் திகழ்கிறது. கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.எனவே, இக்கோவிலை ஓர் ஒப்பற்ற கலை வரலாற்றுக் களஞ்சியம் எனக் கூறுவதில் மிகையில்லை!இக்கோவில், உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், சீரிய முறையில் போற்றிப் பராமரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்!பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்பட்டாலும், "இராஜராஜீச்சுரம்' என்றும், "ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில்' எனவும் கல்வெட்டுகளில் உள்ளதைக் காணலாம்.""பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு ராஜராஜன் கூறுகின்றான். அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.

கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு' எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.
இக்கோவிலின் கிழக்குப் பக்கத்தில், இரண்டு கோபுரங்கள் காணப்படுகின்றன. முதல் கோபுரம், "கேரளாந்தகன் திருவாயில்' என்றும்; இரண்டாவது கோபுரம், "ராஜராஜன் திருவாயில்' என்றும் பெயரிட்டு குறிப்பிடப்படுவது சிறப்பு.ராஜராஜன் திருவாயிலில், அடித்தளத்தில் சண்டீசர் கதை, கண்ணப்ப நாயனார் வரலாறு, காமதகனம், வள்ளித் திருமணம் போன்றவை தொடர் சிற்பங்களாகவும், மேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய துவாரபாலகர் சிற்பங்களும் நம் கருத்தை கவர்கின்றன. கோவிலின் திருச்சுற்றுமாளிகையில், 36 பரிவார கோவில்கள் காணப்படுவதும் சிறப்பாகும்.
இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, "சாந்தாரக் கட்டடக் கலை' அமைப்பு எனக் கூறுவர்.இத்திருச்சுற்றில் தெற்கில் அகோர சிவர், மேற்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்கப் பெற்று, சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தரும் அற்புத கோவில் இது!
கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைந்ததாக உள்ளது.

இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, "கதலிகா கர்ணம்' என்ற கட்டடக் கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், மூன்று சிற்பிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. 1.வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், 2.குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், 3.இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இம்மூவரும், தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆவர். இக்கோவிலில், ராஜராஜசோழனின் 25வது ஆட்சி ஆண்டில், வழிபாடு துவங்கி விட்டதை அறிகிறோம்.
நாள்தோறும் அபிஷேகத்திற்கும், விளக்குகள் எரிப்பதற்கும், கோவில் பணிக்காக தளிச்சேரிப் பெண்கள் 400 பேர் நியமிக்கப்பட்டதையும், மெய்க்காவலர்கள் - பரிசாரகர்கள் நியமிக்கப்பட்டதையும், திருக்கோவிலில் பணியாற்றியவர்கள் பற்றியும், நடந்த திருவிழாக்கள் பற்றியும் கல்வெட்டுகள் விரிவாகக் கூறுகின்றன.கோவிலில் தேவாரம் பாடுவதற்கு 48 பேரும், அவர்களுடன் கொட்டி மத்தளமும் - உடுக்கையும் வாசிக்க இருவர் ஆக, 50 பேர் நியமிக்கப்பட்டனர் என்பதை அறியும் போது, ராஜராஜன் திருமுறைப் பாடல்களிடம் கொண்டிருந்த பக்தியும் - ஈடுபாட்டையும் நம்மால் அறிய முடிகிறது!இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தைக் குறிக்கும்போது, வடக்கில் ஈசானமூர்த்தி கோவில் வரை கல்லில் வெட்டி, அங்கு இடம் போதாமல் போக, ராஜராஜன் திருவாயிலின் இடப்பக்கம் கல்வெட்டு தொடர்ச்சி வெட்டப்பட்டுள்ளது என்ற விவரம் கல்வெட்டில் காணப்படுகிறது.

கோவிலுக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் முறையாக கல்வெட்டாகப் பதிவு செய்ய ராஜராஜன் கொண்டிருந்த ஈடுபாட்டை இதனால் அறிய முடிகிறது.ராஜராஜனும், அவனது தேவியர்களும், மகன் ராஜேந்திர சோழனும், அதிகாரிகளும் சேர்ந்து, 70க்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகளை கோவிலுக்கு செய்தளித்துள்ளனர்.அவ்வாறு அளிக்கப்பட்ட திருமேனியின் உயரம், உருவ அமைப்பு, உலோகம் போன்ற விவரங்களை, கல்வெட்டுகள் துல்லியமாகக் குறிப்பிடுவதால், தஞ்சைப் பெரிய கோவில் வார்ப்புக் கலைக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது.இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட பஞ்சதேகமூர்த்தி, தட்சிணமேருவிடங்கர், அர்த்தநாரீசுவரர், சண்டீசர் வரலாறு கூறும் திருமேனி போன்றவை வேறு எந்த கோவிலிலும் காண இயலாததாகும்.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கும், வீதியுலா எழுந்தருளும் திருமேனிகளுக்கும், நகைகள் செய்து அளிக்கப்பட்டன. அவற்றின் பெயர்கள் மற்றும் அதன் எடை போன்றவை கல்வெட்டுகளில் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.

நகைகளின் பெயர்கள் - திருப்பட்டம், திருக்கைக்காறை, திருப்பட்டிகை, முத்துவளையல், திருமுடி, திருமாலை, மாணிக்கத்தாலி, நவரத்தின மோதிரம், ரத்னவளையல், ரத்னகடகம், பவழக்கடகம், திருவடி நிலை போன்ற, பல அணிகலன்களின் பெயர்கள் காணப்படுகின்றன.இக்கோவிலுக்கு அளிக்கப் பெற்ற முத்துக்களில் தான் எத்தனை வகை! வட்டம், அனுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்பொளம், பயிட்டம், அம்பு, சிவந்த நீர், குளிர்ந்த நீர் என்று பல்வகை முத்துக்கள் கல்வெட்டுகளில் கூறப்படுகின்றன.கோவில் வழிபாட்டிற்காக பல வகையான பாத்திரங்கள் பொன், வெள்ளியால் செய்து அளிக்கப்பட்டன.
அவைகளின் பெயர்கள்: மண்டை, கொண்டி, தட்டம், குடம், கிடாரம், ஒட்டுவட்டில், கலசம், கலசப்பானை, தாரைத்தாள்வட்டில், படிக்கம், குறுமடல், காளாஞ்சி, இறண்டிகை போன்ற பரிகலன்கள் செய்தளிக்கப்பட்டன.இவற்றின் எடை எவ்வளவு என்று, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கல்வெட்டு குறிப்பது மிகவும் சிறப்பானது.

சில பாத்திரங்களில், "சிவபாதசேகரன்,' "ஸ்ரீராஜராஜன்,'  "பஞ்சவன்மாதேவி' என்ற பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததையும் நம்மால் அறிய முடிகிறது.தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும் தான் சோழர் கால ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும், நாயக்கர் கால ஓவியங்களும், மராட்டியர் கால  ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன.இத்திருக்கோவிலில், "உலக முழுவதுடைய நாயகி' எனப் பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்ரமணியர் கோவில் தஞ்சை நாயக்க மன்னர்களின் கலைப் படைப்பாகும். திருச்சுற்றில் தென்மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். எனவே, தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை - வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்றால் மிகையில்லை!இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சைப் பெரிய கோவில் நிறுவப்பட்டு, 1,000 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை, தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இக்கோவிலைக் கண்டு மகிழ்வோம்! பெருமை கொள்வோம்! போற்றிப் பாதுகாப்போம்! 

Wednesday, August 4, 2010

Indian government IS totally online.

Tuesday, July 20, 2010

மூடுவிழாவை நோக்கி அரசு தொடக்கப்பள்ளி

சிவகங்கை அருகே இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் தொடக்கப்பள்ளி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
சிவகங்கை & மதுரை சாலை யில் மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாட்டாகுடி கிராமம்.


இங்கு 1964ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு 1 முதல் 5 வகுப்புகள் வரை உள்ளன. பள்ளி தொடங்கிபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்றனர்.
தற்போது மூன்றாம் வகுப்பில் மாணவி நித்யா, ஐந்தாம் வகுப்பில் மாணவர் சமயத்துரை ஆகிய இருவர் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வகுப்பு எடுக்க ஓர் ஆசிரியை மட்டுமே உள்ளார். அவர்தான் பள்ளியின் தலைமை ஆசிரியையும்கூட.
நாட்டாகுடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.

ஆனால், சாலை, குடிநீர், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பணிக்கு ஆசிரியர்கள் வருவதென்றால் தங்கள் சொந்த வாகனத்தில்தான் வர வேண்டும், அல்லது ஆட்டோ மூலம்தான் வர வேண்டும். தற்போது பள்ளிக்கு வந்துகொண்டிருக்கும் ஒரு ஆசிரியை மதுரை & சிவகங்கை சாலையில் உள்ள படமாத்தூர் விலக்கிலிருந்து மாத வாடகைக்குப் பேசி ஆட்டோவில் வந்துகொண்டிருக்கிறார். இப்பகுதியில் பைக்குகளில் வருவோரிடம் சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதால் பைக்கில் யாருமே வருவதில்லை.


சாலை வசதியும் மிகவும் மோசமாக இருப்பதால் ஆட்டோ டிரைவர்கள்கூட இங்கு வர மறுக்கின்றனர். இதனால், ஆசிரியர்கள் பலர் இடமாறுதல் வாங்கிச் சென்றுவிட்டனர். ஒரு சில ஆசிரியர்களை மட்டுமே கொண்டு பள்ளி இயங்கியதால் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பதை நிறுத்திக்கொண்டனர்.
இதற்கிடையே, 10 ஆண்டுகளுக்கு முன் வறட்சி ஏற்பட்டபோது இந்த கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் நகரத்தை நோக்கிக் குடிபெயர்ந்தன. இதனால், மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் வெகுவாகக் குறைந்தது.

வறட்சியைத் தாங்கி நின்ற குடும்பங்களில் சிலர் வேலைக்காக நகரங்களுக்குச் சென்று வர பஸ் வசதி இல்லாததால் அவர்களும் நகரங்களுக்கே குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.
இதனால், பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தத்தில் நின்றுவிட்ட நிலையில் தற்போது 2 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர் இல்லாத நிலையில் 2 மாணவர்களுக்காக ஓர் ஆசிரியை இங்கு பணியாற்றுவது பரிதாபமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் இதுபோன்ற அரசுப் பள்ளிகளின் நிலையை அறிந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதில்லை.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடிப்படை வசதிகளை உயர்த்துவதோடு கல்வித் தரத்தையும் உயர்த்தினால்தான் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கக்கூடிய நிலை உருவாகும். இல்லையெனில் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும். நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் வருகையே இல்லாத காரணத்தால் கடந்த மாதம் அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று மூடப்பட்டது. இதுபோன்ற நிலைமையைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியப்பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்

பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்

இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.பிரிட்டனிலுள்ள "தேசிய பாரம்பரிய நினைவு நிதி' (என்.எச்.எம்.எப்.,) என்ற அமைப்பு, கி.பி.19ம் நூற்றாண்டில் பிரிட்டன் தொடர்பான பல்வேறு பழமையான ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. மொத்தம் 4,500 பெட்டிகளில் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அரசு சார்ந்த ஆவணங்களும், தனிநபர் கடித போக்குவரத்து தொடர் பான ஆவணங்களும் இதில் அடங்கும்.

இந்தியாவின் இறுதி வைசிராயாக இருந்த மவுன்ட்பேட்டனுக்கும், காந்திக்கும் இடையில் இந்தியா விடுதலையை நெருங்கும் நேரத்தில் கடித போக்குவரத்து இருந்தது. அந்த கடிதங்கள் இந்த ஆவணங்களில் உள்ளன. பிரிவினை குறித்து இறுதி கட்டத்தில் காந்தி ஏன் மவுனம் சாதித்தார் என்பதை, இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. என்.எச்.எம்.எப்., செதித்தொடர்பாளர் கூறுகையில், "கடித உறைகளின் பின்பக்கம், காந்தி பென்சிலால் பல குறிப்புகள் எழுதியுள்ளார். இவற்றின் மூலம் பிரிவினை யை எதிர்த்த அவர் இறுதியில் விருப்பமே இல்லாமல் ஏன் சம்மதித்தார் என்று தெரிய வருகிறது' என்று கூறுகிறார்.


காந்தி தொடர்பான இக்குறிப்புகளை மட்டும், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் விலைக்கு வாங்க போகிறது. இதற்காக, அது நிதி திரட்டி வருகிறது. அதன் இலக்கான 20 கோடி ரூபாயில், தற்சமயம் என்.எச்.எம்.எப்., மானியத்துடன் 14 கோடி ரூபாயை திரட்டி விட்டது.


பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆவணத்துறை பேராசிரியர் ச்ரிஸ் வூல்கர் கூறுகையில், "காந்தியின் இந்த ஆவணங் களை வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஆவணங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் விடுதலைக் கான அடிப்படை வரலாற்றை நாம் எழுத முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்

சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.
சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.


பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் சதீஷ் என்பவர் கூறியதாவது:நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சதீஷ் கூறினார்.


இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.


இதுகுறித்து விமான்ஸ் மருத்துவமனை மனோதத்துவ நிபுணர் சமீர் பரிகார் கூறியதாவது: கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர்.தற்போதைய வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32 வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக "ரிஸ்க்'குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு சமீர் கூறினார்.


"மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது' என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றன

அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்

இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல இனி நமது கரன்சிக்கு என்று இதன் மூலம் பிரத்யேக அடையாளம் அமையும்; அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைக்கும் வரும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பொருளாதாரத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆனால், டாலருக்கு நிகராக மாற்று செலாவணியாக யூரோ போல அல்லது பவுண்ட் - ஸ்டெர்லிங் போல வரும் முன், ரூபாய்க்கு என்று தனியாக சின்னம் அவசியமாகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கரன்சியும், "ரூப்யா' என்றழைக்கப்படுகிறது. ஆகவே, டாலருக்கு, பவுண்டிற்கு, ஜப்பான் யென்னிற்கு தனிச்சின்னம் போல இந்திய ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் வகையிலும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் புதிய சின்னம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.


போட்டி: இதையடுத்து, புதிய சின்னத்தை வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம் போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி புதிய சின்னம், சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பொதுவான கீ-போர்டில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்திய தேசிய மொழிகளின் எழுத்துருவை பெற்றிருக்க வேண்டும்; பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியின் முடிவில் தேர்ந்தேடுக்கப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு, இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு 3,000 புதிய சின்னங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து புதிய சின்னத்தை தேர்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம், ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவினர், புதிய சின்னங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதியில் ஐந்து சின்னங்களை தேர்வு செய்தனர். பின், அந்த ஐந்து சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பினர். புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.


கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.


கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்

Sunday, July 11, 2010

ADMK கூடாரம் காலியாகிறது

ஜெ சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருடன் 15 முக்கியத் தலைவர்கள் இருந்தார்கள். அதில் இன்று அம்மாவுடன் இருப்பவர் செங்கோட்டையன் மட்டும் தான். சிலர் அரசியலை விட்டு ஒதுங்கியும், சிலர் வேறு கட்சியிலும் இன்னும் சிலர் இன்று திமுகவில் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

அம்மா அன்று முதல் இன்று வரை கட்சியைவிட்டு ஒருவர் சென்றால் ஏன் செல்கிறார் எதற்கு செல்கிறார் என்று அதற்கு பின் யோசிப்பதே இல்லை. யார் போனாலும் கவலை இல்லை கட்சியில் இருப்பவர்கள் இருக்கலாம் இது மட்டுமே கருத்து.

எம்.ஜீ.ஆர் பார்த்து பார்த்து வளர்த்த ஆலமரம் அதிமுக இன்று வேர்கள் ஒவ்வொன்றும் காணமல் சென்று கொண்டு இருக்கிறது அன்றைய எம்.ஜீ.ஆர் விசுவாசிகள் அனைவரும் இன்று எம்.ஜீ.ஆரின் நண்பர் கலைஞர் இடத்தில் இருக்கிறார்கள். எம்.ஜீ.ஆர் அவர்களை எப்படி வைத்து இருந்தாரோ அதே போல் தான் இன்றும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராஜ மரியாதையோடு இருப்பதை பார்த்த மற்றவர்கள் திமுகவிற்கு போக விரும்புகிறார்கள்.

தூத்துக்குடி அனிதா இவர் தொண்டர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்றவர், சத்தியமூர்த்தி இவர் ஒரு மாவட்ட செயலாளர் என்று சமீபத்தில் திமுகவிற்கு வந்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.

அம்மாவின் ஆசியுடன் பதவிக்கு வந்தவர் செல்வகணபதி இளவயதில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தார். அவரும் அம்மாவிற்கு விசுவாதியாகவே இருந்தார். சேலத்தில் நடந்த ஒரு மக்களவை தேர்தலில் வாழப்பாடியைரை எதிர்த்து போட்டியிட்டார் அப்போது வாழப்பாடியார் 3 இலட்சம் இலவச காஸ் இணைப்புகள் தொகுதி முழுவதும் கொடுத்து இருந்தார் அவரை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்று அனைத்து பத்திரிக்கையிலும் கருத்துக்கணிப்பிலும் சொன்னார்கள் ஆனால் செல்வகணபதியின் அதிரடி அரசியலில் சேலத்தில் வாழப்பாடியாரை எதிர்த்து வென்றார். இந்த அளவிற்கு அதிரடி அரசியல் செய்யும் ஒரு தொண்டரை கட்சியை விட்டு தூக்கியதால் அவர் திமுகவிற்கு சென்று அங்கும் தனது உழைப்பைக் காட்டி இன்று துணை முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராகி மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார்.



தற்போது முத்துசாமி இவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள், பல கவுன்சிலர்கள் 700 பேருந்துகளில் 30 ஆயிரம் தொண்டர்கள் என திமுகவில் ஐக்கியம். முத்துசாமி 1977ம் ஆண்டு எம்எல்ஏ ஆகி அன்று எம்.ஜீ.ஆரின் அமைச்சர் அவையில் போக்குவரத்து அமைச்சர் மட்டுமின்றி எம்.ஜீ.ஆரின் நம்பிக்கைக்கு உரியவர். இவர் தந்தை இறந்ததற்கு இவரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு எம்.ஜீ.ஆரே நேரில் வந்து ஆறுதல் கூறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர். 1989ம் ஆண்டு கட்சியின் சின்னம் முடக்கப்பட்ட போது அதை மீட்டு அம்மாவிடம் தந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. முத்துசாமி திமுகவிற்கு செல்கிறார் என்ற உடன் அம்மா அதிமுகவில் இருந்து ஒரு தொண்டரையும் நான் இழக்க விரும்பவில்லை என்று கூறியவர் முத்துசாமியை இழக்காமல் இருந்திருக்கலாம். ஈரோட்டில் முத்துசாமிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. ஈரோடு நகர் முன்னேற்றத்திற்கு இவரும் ஓர் காரணம் .

இவர்களைத் தவிர தற்போது அதிமுகவில் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை யார் என பார்த்து அவர்களுக்கு என தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதா என விசாரித்து இன்னும் பல பேர் திமுகவிற்கு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இதுவரை வெளியே சென்றவர்கள் போகட்டும் இனி யாரும் இருப்பவர்களையாவது போகமல் பார்க்க வேண்டும் செய்வாரா அம்மா பொறுத்திருந்து பார்ப்போம்

Monday, July 5, 2010

CHILD LABOUR

PETROL PRICE

petrol price in other countries : pakisthan : Rs 26 only , BANGLADESH 22 , Cuda 19 , Nepal 34 , Burma 30, Afganisthan 36 , Quathar 30௦, India Rs .56 . Basic cost price per liter RS.16.50, Center tax 11.80, Excise duty Rs.9.75, State tax Rs.8.00, vat ces Rs.4.00,Total 50.05 now extra 6.00 rupess for the commission of our wonderful Indian ministry are they looting and cheating.... they cheating to our own Indian Peoples .........

Thursday, July 1, 2010

தேவையா இது திருநாவுக்கரசர் க்கு?

பா.ஜ.,வில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த திருநாவுக்கரசர், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார். நல்ல எதிர்காலம் உண்டு, நல்ல பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேர்ந்தவர் தற்போது நொந்து போயுள்ளார். தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்ததை, தமிழகத்தில் ஒரு பெரிய விழாவாக எடுக்க ஆசைப்பட்ட திருநாவுக்கரசர், சோனியாவின் அனுமதிக்காக காத்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் இதுவரை சோனியாவின் அனுமதி கிடைக்கவில்லை. காங்கிரசில் தனக்கு எம்.பி., பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதிலும் மண் விழுந்தது. போதாக்குறைக்கு தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். அதனுடைய விளைவு தான், இதுவரை இவருடைய இணைப்பு விழாவிற்கு மேலிடத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இவருடைய ஆதரவாளர்களோ, "அம்மா சோனியாவுடன் நீங்கள் இருக்கும் படம் கூட நம்மிடம் இல்லையே' என்று இவரிடம் சொல்லி வருத்தப்படுகின்றனர்.மத்திய பிரதேசத்திலிருந்து திருநாவுக்கரசரை எம்.பி.,யாக்கியது பா.ஜ., "மீண்டும் எம்.பி., பதவி தருகிறோம், உங்களை தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கிறோம்' என்று உறுதியளித்தது பா.ஜ., அனைத்தையும் உதறிவிட்டு வந்த திருநாவுக்கரசர் இப்போது நிர்கதியாக நிற்கிறார்.திருநாவுக்கரசருக்கு அவருடைய தொகுதியில் உள்ள செல்வாக்கு எங்களுக்கு தெரியும்; அதனால், அவரை கவுரவப்படுத்தினோம். ஆனால், காங்கிரஸ் தமிழனை எப்படி மதிக்கிறது என்பதை இப்போது திருநாவுக்கரசர் உணர்ந்து கொண்டிருப்பார் என்கிறது பா.ஜ., வட்டாரம்.

ஊழல் மலிந்த 13 நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கும் இடம்

ஊழல் அதிகமாக பரவியுள்ள 13 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமும் இந்த நாடுகளில் மோசமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"இந்தோ - டச் திட்ட மேலாண்மை சொசைட்டி' என்ற அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும், ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை தயாரித்தது. இந்த அறிக்கை, சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது.இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் ஊழல் அதிகமாக பரவியுள்ளது. கவுதமாலா, பராகுவே, கானா, கென்யா, பெரு, அர்ஜென்டினா, ரஷ்யா, ருமேனியா, அல்பேனியா, மல்டோவா, போலந்து, இந்தோனேசியா ஆகியவை இந்த பட்டியலில் உள்ள மற்ற நாடுகள். இந்த நாடுகளில் அரசின் நிர்வாக செயல்பாடும் மோசமாக உள்ளது.


இந்தியாவில் செயல்படும் அரசு சுகாதார மையங்களில் 24 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுவான நோய்களுக்கு தேவையான மருந்துகள் இங்கு கிடைப்பது இல்லை. டாக்டர்கள் தங்கள் பணி நேரத்தில் இருப்பது இல்லை. போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இந்த 13 நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர், உள்ளூர் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பவர்களாக உள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு மட்டும் 264 கோடி

கோவை: செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக, கோவை நகரில் துவக்கப்பட்டு, அரை குறையாக உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென்று பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.


கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒட்டு மொத்தமாக, மாநில அரசுத்துறைகளின் சார்பில் மட்டும் 263 கோடி ரூபாய்க்கு மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை மற்றும் விமான நிலைய ஆணையம் சார்பில், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் சாலை விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளன. இந்தப் பணிகளில், மாநில நெடுஞ்சாலைத்துறைப் பணிகள் மட்டுமே, முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை மற்றும் விமான நிலைய ஆணையம் என பல்வேறு துறைகளும் மேற்கொண்ட பணிகள், இன்னும் முழுமை பெறவில்லை.


தேசிய நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் திருச்சி சாலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டுமென்பதற்காக, பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனை வரையிலான சாலை, பெருமளவில் அகலப்படுத்தப்பட்டது. மாநாட்டுக்காகவே, மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்தும் பணியைத் துவக்காமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிறுத்தி வைத்திருந்தது. விரைவில் அங்கு மரங்களை வெட்டும் பணி துவங்குமென்று தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்கள் தெரிவித்தனர். செம்மொழி மாநாட்டையொட்டி வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் திட்டமிடப்பட்டிருந்த எந்தப் பணியுமே நடக்கவில்லை. கோவை ரயில் நிலையத்தில், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தும் திட்டமும் இறுதி வரை நிறைவேற்றப்படவில்லை. அங்கு கூடுதல் சுரங்க நடைபாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் துவக்கப்பட வேண்டியுள்ளன. விமான நிலைய மேம்பாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும், இன்னும் சிறுசிறு பணிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. அதோடு மாநகராட்சிப் பணிகளும் மிச்சமுள்ளன.


கோவை நகரில், அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஸ்டேட் வங்கிச் சாலை, காமராசர் சாலை, பாரதியார் சாலை, வ.உ.சி., பூங்கா சாலை உட்பட நகரின் பல்வேறு சாலைகளில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புதிதாக நடைபாதைகள், சிறு பூங்காக்களும் அமைக்கப்பட்டன. ஆனால், அவையனைத்துமே அரை குறையாக, இடைவெளி விட்டு காணப்படுகின்றன. ரயில் நிலையம் முன்பாக, நடைபாதைக்கான தளமே அமைக்கப்படவில்லை. இதே சாலையில், பல இடங்களில் நடைபாதையில் பதிக்கும் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, குட்ஷெட் சாலையில் உள்ள சாக்கடையின் மீது மூடி அமைத்து, அதை நடைபாதையாகவும், "பார்க்கிங்' பகுதியாகவும் மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரையிலும் அந்த வேலையும் நடக்கவில்லை.


செம்மொழிப் பூங்கா என்ற பெயரில், புதிதாக அமைக்கப்பட்ட பூங்காக்களில் அவசர கதியில் வைக்கப்பட்ட செயற்கைப் புல்வெளிகள், மரங்கள் காய்ந்து கருகியுள்ளன. அவற்றை முழுமையாகப் பராமரிக்கும் நடவடிக்கையும் இல்லை. மாநாட்டுக்காக சிறப்பாக உழைத்து, பல லட்சம் மக்கள் பயன் படுத்திய குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, தூய்மைப் புரட்சி செய்த மாநகராட்சி நிர்வாகம், எஞ்சியுள்ள வேலைகளையும் சீக்கிரமாக முடித்தால் செம்மொழி மாநாட்டின் நினைவு, கோவை மக்களிடம் என்றென்றும் பசுமையாக இருக்கும்.


நிழற்குடைகளில் வெயில்: மாநகராட்சி நிர்வாகத்தால், கோவை நகரில் நிறுவப்பட்ட நிழற்குடைகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஸ்டாலின், கூரையின் பரப்பை நீட்டிக்குமாறு அறிவுறுத்திச் சென்றார். ஆனால், அவர் குறிப்பிட்டுக் காட்டிய அனைத்து நிழற்குடைகளும், துணை முதல்வர் சொன்ன அளவில் பயணிகளுக்குபயனுள்ளபடி மாறவில்லை. இதனால், உள்ளே நின்றாலும் வெயில் அடிக்கிறது. மழை பெய்தாலும் பயணிகள் நனையும் நிலை உள்ளது.

தலைவர் கலைஞர் அவர்களுக்கு தெரியுமா?

வேலூர் :குடியாத்தம் அருகே, முதல்வர் கருணாநிதிக்கு வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி கோயில் கட்டியுள்ளார்.


வேலூர் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர். சாமிரெட்டிபல்லியில் தனக்கு சொந்தமான இடத்தில் 2 லட்சம் ரூபாய் செலவில் முதல்வர் கருணாநிதிக்கு இவர் கோயில் கட்டியுள்ளார்.இரண்டரை அடி உயரத்தில் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு கற்சிலையை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. "கேட்டால் கொடுப்பார் கடவுள்; கேட்காமல் கொடுப்பார் கருணாநிதி' என, அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்காக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கவுன்சிலர் கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, ""முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயரிய சிகிச்சை அளிக்க மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கிராம மக்கள் பயன் பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, இலவச கலர் "டிவி', ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். அதனால், முதல்வருக்கு கோயில் கட்டியுள்ளேன். இங்கு மூன்று வேளையும் பூஜை நடக்கும். ஆண்டு முழுவதும் அனைத்து நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும். கோயிலுக்கு வருபவர்களுக்கு மதியம் இலவச உணவு வழங்கப்படும்,'' என்றார்.

Tuesday, June 29, 2010

எவ்வளவுதன கொள்ளை அடிப்பாங்க ?

"எம்.பி.,க்களின் சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பளம் பத்து ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. ஆனால், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் 2006ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால், எம்.பி.,க்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதே நேரத்தில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியோ, "எம்.பி.,க்களின் சம்பளத்தை அவர்களே முடிவு செய்ய வேண்டியுள்ளதால், அது சரியாக இருக்காது. அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை முடிவு செய்ய சம்பளக் கமிஷன் அமைக்கப்படுவது போல, எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.


இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடிதம் எழுதினார். ஆனால், "அதுபோன்ற ஒரு அமைப்பு முறையை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் பற்றி பின்னர் பரிசீலிக்கப்படும்' என, அரசு தரப்பில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டது.இருந்தாலும், மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய எம்.பி.,க்கள் குறைவான சம்பளம் பெறுகின்றனர். அது சரியல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தது.


ஒரு ரூபாய் அதிகம்: இந்த சூழ்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளத்தை தற்போதுள்ள 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும் என, பார்லிமென்ட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இந்த சம்பளம் மத்திய அரசின் செயலர் பெறும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் அதிகம். காங்கிரஸ் எம்.பி., சரண் தாஸ் மகந்த் தலைமையிலான பார்லிமென்ட் கமிட்டி, "பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் தினசரி அலவன்சை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலகச் செலவுகள் அலவன்சை அதிகரிக்க வேண்டும். 34 முறை விமானத்தில் இலவசமாக பறக்க அனுமதிக்க வேண்டும்' என்றும் பரிந்துரை செய்துள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன் நடந்த அபாயம்...

கடந்த ஜூன் 25, 1975ம் ஆண்டு நள்ளிரவு, ஒரே உத்தரவில் இந்திரா, "நாட்டின் விடுதலை விடியலில் மக்களின் சுதந்திர செயல்பாடும், ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படும்' என்று அவரது தந்தை நேரு, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தகர்த்தெறிந்தார்.


இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர் அறிவித்த உள்நாட்டு அவசர நிலை பிரகடனம், 21 மாதங்களுக்கு நீடித்தது. அந்த காலகட்டம், சுதந்திரத்திற்கு பிறகு நாடு சந்தித்த மிக மோசமான காலம்.நாட்டின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு, "நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைநோக்கும், விவேகமும், அனைத்து இந்தியர்களின் சுதந்திரப் பெருமை பாதுகாக்கப்படும்' என்று நாடு சுதந்திரம் பெற்ற போது கூறிய உறுதிமொழி மறக்க முடியாதது. அதற்கு 28 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது மகள் இந்திரா, சுதந்திரத்தைப் பறித்து, உள்நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து, உத்தரவிட்டது அதிர்ச்சியான சம்பவம்.


அவப்பெயர் சம்பாதித்த, அவசர நிலை பிரகடனம் அமலான ஒரு மாதத்திற்கு பிறகு, ஜூலை 22ம் தேதி, பார்லிமென்டில் பேசிய இந்திரா, "நான் சர்வாதிகாரியாக இல்லாத போது, என்னை அப்படி அழைத்தீர்கள்; இப்போது நான் உண்மையில் சர்வாதிகாரி' எனக் கூறினார். அதுகுறித்த செய்தியை, "பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' சேகரித்ததும் சென்சார் அதிகாரி அதற்கு அனுமதி மறுத்து, செய்தியை புதைத்தது வரலாறு.ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், அவர் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தடை செய்து, ஜூன் 1975ல் அலகாபாத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவையடுத்து, இந்திராவுக்கு உண்மையில் பிரச்னை ஏற்பட்டது. 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற சோஷலிச தலைவர் ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பால், உருவான விளைவு இது.


எனினும், அதே ஆண்டு ஜூன் 24ம் தேதி, ஐகோர்ட் உத்தரவுக்கு நிபந்தனையோடு கூடிய தடை விதித்த சுப்ரீம் கோர்ட், லோக்சபாவில் நடைபெறும் விவாதங்களில் பங்கு பெறவும், ஓட்டளிக்கவும் இந்திராவுக்கு உள்ள உரிமையை அளிக்க மறுத்தது.சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகு, தேசம் முழுவதும் ஒரே கொந்தளிப்பு. ஊழலுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய, "முழுமைப் புரட்சி' இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட எதிர்க்கட்சிகள், பார்லிமென்டில் இந்திராவை குறி வைத்து செயல்பட்டன. அவர் பதவி விலகக் கோரி, தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.அதன் உச்ச கட்டமாக ஜூன் 24ம் தேதி, நிறைய அரசியல் நடவடிக்கைகள்... எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உணர்வுபூர்வமான உரைகளை வெளியிட்டனர்.


அதற்கு ஒரு சான்றாக, "ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இந்திரா தலைமையிலான அரசு இழந்துவிட்டது; இந்த அரசிடமிருந்து ராணுவம் ஆணை பெற அவசியமில்லை' என்று ஜெ.பி., கூறினார்.கலவரத்தை தூண்டும் விதமாக ஜெ.பி.,யின் பேச்சு அமைந்துள்ளதாகக் கூறிய இந்திராவும், அவரது கூட்டாளிகளும், அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முயன்றனர். அப்போதைய மேற்கு வங்க முதல்வர் சித்தார்த் சங்கர் ரே, அரசில் முக்கிய இடம்பெறாத சஞ்சய் ஆகியோருடன் இணைந்து, இந்திரா நடத்திய ரகசிய கூட்டத்தில், அவசர நிலையை அமல்படுத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இந்த முடிவுக்கு சாதகமாக கிடைக்கவில்லை என்ற போதிலும், அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, அவசர நிலை பிரகடனத்திற்கு ஒப்புதலை அளித்தார்.


நாடு முழுவதும், அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் நூற்றுக்கணக்கில் கைதாயினர்; ஜெ.பி., சிறையில் அடைக்கப்பட்டார். பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்படாத நிலையில், நடக்கும் நிகழ்வுகள் பற்றி நாளேடுகள் பிரசுரித்தன.அகில இந்திய வானொலியும் கூட அவசர நிலை குறித்த செய்தியை வெளியிட்டது. அந்த காலகட்டத்தில் நான், மும்பையில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் நிருபராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூன் 26ம் தேதி காலை, அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஜனசங்க தொண்டர்கள், ரயில் நிலையங்களில் நடத்திய ஆர்ப்பாட்டங்களை பார்த்தேன்.அலுவலகத்தில், மூத்த பத்திரிகையாளர்கள் நடக்கும் நிகழ்வுகளையும், கைதாகும் முன் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும், டில்லியில் இருந்து வரும் செய்திகளையும், சில பிரபலமானவர்களின் கருத்துக்களையும் ஆராய்ந்தபடி இருந்தனர். அவசர நிலை அறிவிப்பை நியாயப்படுத்தும் அரசின் அறிக்கைகளும் வெளியாயின. அந்த நேரத்தில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படவில்லை.


ஆனால், திடீரென டில்லி - மும்பை டெலி பிரின்டர் இணைப்பில் பிரச்னை ஏற்பட்டு, அது நின்று போனது. போபால் வழியாக டில்லியிலிருந்து செய்தி வந்து கொண்டிருந்தது; விரைவில் அதுவும் நின்று போனது. டெலி பிரின்டரின் அச்சடிக்கும் இயந்திர சத்தம் விரைவில் அமைதியானது; மயான அமைதி.திடீரென டில்லி - மும்பை டெலி பிரின்டர் இணைப்பு உயிர் பெற்று, "செய்தி அனுப்பும் அனைத்து வேலையையும் நிறுத்தி விடவும்; விவரங்கள் தொடரும்' என்று தலைமை ஆசிரியர் சக்ரவர்த்தி ராகவன் அவசரமாக செய்தி அனுப்பினார். ஏதோ மோசமான விளைவு என்பதை சொல்லாமல் சொன்ன அறிவிப்பு. திரும்பவும் அனைத்து இணைப்புகளும் செயலிழந்தன.பதற்றமான சில மணி துளிகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு டெலி பிரின்டர் செய்தி.


"பத்திரிகைகளின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது' என்ற அறிவிப்பு. அனைத்து செய்திகளையும் வெளியிடும் முன், டில்லிக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்ற தகவலும் தொடர்ந்தது.மாநில அளவில் செய்திகளை ஆராய்ந்து அனுமதி தரும் அலுவலர்கள் நியமிக்கப்படும் வரை, டில்லியிலிருந்து அனுமதி பெறுமாறு வழிகாட்டு நடைமுறைகள் அனுப்பப்பட்டன. ஒருநாள் கழித்த பிறகு, மும்பைக்கான சென்சார் அதிகாரி நியமிக்கப்பட்டார். இருந்தும், நகரத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்தியாளர்கள் சேகரித்தனர். ஆனால், இது அடுத்த நாள் நாளேடுகளில் வெளிவராது என்று எங்களுக்கு தெரியும். அவசர நிலை பிரகடனத்திற்கு சில மணி நேரத்திற்கு பிறகு, தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பமாகாத நிலையில் இது நடந்தது.நிலைமையின் தீவிரத்தை ஆழமாக உணர, அடுத்த இரண்டு நாட்களானது. அந்தக் காலம் இனி ஒரு போதும் இந்தியாவுக்கு வரக்கூடாது.

அரசியல் கட்சியினர் அடாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல் பிளாசாக்களில் சுங்க வரி கட்ட மறுத்து அரசியல் கட்சியினர் செய்யும் அடாவடிகளினால் ஒட்டு மொத்த சாலை மேம்பாட்டு திட்டங் களும் செயலற்று போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டோல் பிளாசாக்களில், கட்சிக் கொடிகளை கட்டிக்கொண்டு வாகனங்களில் செல்லும் தொண்டர்களின் அட்டகாசங்களை கட்சித் தலைமைகள் கண்டு கொள்ளாததே இதற்கு காரணம். டோல் பிளாசாக் களில் கட்டணம் செலுத்தாமல், கலவரம் செய்யும் அரசியல் கட்சி யினர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை நாட்டின் பெரும்பாலான முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இருவழிச் சாலைகளாக, குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப் பட்டன. இச்சாலைகளை விரி வாக்கம் செய்யவும், புதுப்பிக்கவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்ற நிலையில், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் அரசு தவித்து வந்தது.நாட்டில் மொத்தம் 10 ஆயிரம் கி.மீ., தூரத்திலான சாலைகள் தற் போது, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் நான்கு வழிச்சாலை களாகவும், ஆறுவழிச் சாலைகளா கவும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் எல் அண்டு டி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்கள், சாலை மேம்பாட்டிற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்தன. இத்திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாலையை மேம்படுத்தும் பணி, அந்தந்த நிறுவனத்திடம் ஒப்படைக் கப்படும். சாலைப் பணிகள் முழுவதுமாக முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்போது, டோல் பிளாசாக்கள் அமைத்து, இலகுரக வாகனங்கள் முதல் டிரக்குகள் போன்ற கனரக வாகனங்கள் வரை சுங்கவரியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், குறிப்பிட்ட காலம் வரை வசூலித்துக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை, முன்னதாக முதலீடு செய்த தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திரும்ப பெறுவதற்கும், மேம்படுத்தப்பட்ட சாலைகளை குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பதற்கும், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு உதவுவது, தகவல் மையம், ரோந்து போன்ற பல்வேறு பணிகளுக்கும் பயன் படுத்தப்படும். கடந்த 2008ம் ஆண்டு மத்திய அமைச்சரவையால் திருத்தியமைக்கப்பட்ட சுங்கவரி கட்டணமாக கார், ஜீப் போன்ற வாகனங்களுக்கு ஒரு கி.மீ.,க்கு 65 பைசா வீதமும், இலகுரக கமர்ஷியல் வாகனங்களுக்கு ஒரு ரூபாய் 5 பைசா, பஸ், டிரக் போன்ற வாகனங்களுக்கு இரண்டு ரூபாய் 20 பைசா, கனரக இயந்திர வாகனங்களுக்கு 3 ரூபாய் 45 பைசா, கன்டெய்னர்களுக்கு 4 ரூபாய் 20 பைசா வீதமும் வசூலிக்கப்படுகின்றன. பல கட்டங்களாக கான்ட்ராக்ட் விடப்பட்டு, பணிகள் நடத்தப்பட்ட ஒரே தொடர் சாலைகளுக்கு தனித்தனியாக சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.


இம்முறை அமலுக்கு வந்த பின்னரே தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல மாநிலங்களில் தரமான சாலைகள் கிடைத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, தமிழக சாலை மேம்பாட்டுக் கழகம் ஆகிய அரசு நிறுவனங்களும், எல் அண்டு டி, ரிலையன்ஸ், ஜி.எம். ஆர்., உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்களும், டோல் பிளாசாவை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற் றுள்ளன. சாலைகள் நல்ல நிலையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல ஒத்துழைப்பு காணப்படுகிறது. டோல் பிளாசாக்களில் உள்ளூர் பொதுமக்களிடமும், இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் பணம் வசூலிக்கப்படுவதில்லை. காரில் செல்லும் வசதி படைத்தவர் களிடமும், வர்த்தக வாகனங் களிடமும் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது.


இந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் டோல் பிளாசாக்களில் பணம் செலுத்திவிட்டு செல்லும் நிலையில், அரசியல் கட்சியினர் பணம் செலுத்த மறுப்பது, டோல் பிளாசா ஊழியர்களுடன் தகராறு செய்வது; அடிதடி ரகளை; துப்பாக்கி காட்டி மிரட்டுவது; வாகனங்களை ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவது என அராஜகங் களை நிகழ்த்திக் கொண்டிருக் கின்றனர்.கடந்த சில மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் அரசியல் கட்சித் தொண்டர்களின் அட்டகாசம் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.


சென்னை, ராஜிவ்காந்தி சாலை, பெருங்குடியில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் டோல்கேட் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெருங்குடி பேரூராட்சியில் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பார்வையிடுவதற்காக, அப்போதைய தாம்பரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மதிவாணி, தாம்பரம் வருவாய் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அரசு வாகனத்தில் சென்றனர். பெருங்குடி டோல்கேட்டிற்கு சென்ற தும், சுங்கவரி வசூலிப்பதற்காக தாசில்தார் சென்ற வாகனத்தை டோல்கேட் ஊழியர்கள் மடக்கினர். எந்த வாகனமாக இருந்தாலும் கட்டணம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என டோல்கேட் ஊழியர்கள் கூறினர். இதனால், தகராறு ஏற்பட்டது. பெருங்குடி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தி.மு.க., செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் டோல்கேட் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். டோல்கேட் ஊழியர் தங்கவேல் என்பவர் துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், தாசில்தார் மற்றும் தி.மு.க., செயலர் ரவிச்சந்திரன் மீது புகார் கொடுத்தார். இதையறிந்த ரவிச்சந்திரனின் ஆதரவாளர்கள் டோல்கேட்டிற்கு சென்று, அங்கிருந்த டோல்பிளாசா மூத்த கண்காணிப்பாளர் சண்முகத்தை தாக்கினர். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, டோல்கேட் ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து டோல்கேட் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், இதுவரை ஒரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தினால் ஒருமணி நேரத் திற்கும் மேலாக கட்டணம் செலுத் தாமல் அனைத்து வாகனங்களும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.


திருச்சியில் இருந்து மதுரை செல் லும் வழியில் நெடுஞ்சாலையில், விராலி மலையில் ஒரு டோல் பிளாசா உள்ளது. இவ்வழியாக கடந்த 18ம் தேதி திருச்சி மாவட்டம், மருங்காபுரி தி.மு.க., ஒன்றிய செயலர் செல்வராஜ் (45) என்பவர், கட்சியினருடன் காரில் வந்தார். டோல்கேட் ஊழியர்கள் செல்வராஜ் காரை வழிமறித்து, சுங்கவரிக்கான டிக்கெட்டை கொடுத்தனர். அப்போது, "நாங்கள் ஆளும் கட்சியினர். எங்களிடமே சுங்கவரி வசூலிக்கிறாயா?,' என்று கேட்டு செல்வராஜ், அவர்களிடம் தகராறு செய்தார்.
சிறிது நேரத்தில் காரில் இருந்த கட்சியினர் டோல் பிளாசாவையும், டோல் பிளாசா ஊழியர்கள், செல்வராஜ் காரையும் தாக்கினர். இதில், ஆத்திரமடைந்த செல்வராஜ், காரில் இருந்து துப்பாக்கியை எடுத்து "புல்லட்' நிரப்பியுள்ளார். அதில், இரண்டு புல்லட்க்கள் கீழே விழுந்துள்ளன. டோல் பிளாசா ஊழியர்கள் போலீசுக்கு போன் செய்யவே, செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர். ஆனால், இது குறித்து மேல் நடவடிக்கை இதுவரை இல்லை.


சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை என மூன்று முக்கிய சாலைகள் செல்கின்றன. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. இச்சாலை களில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆங்காங்கே டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வேறு சில சாலைகளில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஊழியர்கள், இரு சக்கர வாகனங்கள் தவிர அனைத்து வாகன ஓட்டி களிடமும் கட்டணம் வசூலிக்க வேண்டும். வாகனங்கள் விரைவாக கட்டணம் செலுத்திவிட்டு செல்வதற்கு வசதியாக பல கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், அரசியல் கட்சி பிரமுகர்கள், தாதாக்கள், ரவுடிகள் பணம் செலுத்துவதில்லை.


சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் டோல் பிளாசா அமைக்கப் பட்டுள்ளது. இதன் வழியே செல்லும் கார்களுக்கு 25 ரூபாய், வேன்களுக்கு 40 ரூபாய், பஸ் மற்றும் லாரிகளுக்கு 90 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காரில் ஒரு முறை போய்விட்டு திரும்பி வர 40 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. மாத கட்டணமாக 900 ரூபாய் செலுத்தி பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இவ்வழியில் தினமும் குறைந்தது நூறு வாகனங்கள் பணம் செலுத் தாமல் செல்கின்றன. அரசியல் கட்சிக் கொடி கட்டிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவே ஊழியர்கள் பயப் படுகின்றனர்.சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர், தொழுப்பேடு ஆகிய இடங்களில் டோல் பிளாசா உள்ளன. இச்சாலையில் தினமும் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இவற் றில் குறைந்தது 250 வாகனங்கள் கட்டணம் செலுத்துவதில்லை.


கடந்த ஏப்ரல் மாதம் மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டிற்கு வந்த 1,500 வாகனங்கள், வன்னியர் சங்க மாநாட்டிற்கு வந்த 2,500 வாகனங் கள், மே மாதம் திருச்சியில் நடந்த இந்திய ஜனநாயக கட்சி மாநாட் டிற்கு சென்ற 250 வாகனங்கள், அரசு ஊழியர் சங்க மாநாட்டிற்கு சென்ற ஆயிரம் வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை. அதேபோல் அரசியல் தலை வர்கள் பிறந்த நாள் விழா, நினைவு தினம், கட்சி செயற்குழுக் கூட்டம், பொதுக்குழுக் கூட்டம் போன்றவை நடைபெறும்போது அதில் கலந்து கொள்ளச் செல்ப வர்கள் கட்டணம் செலுத்து வதில்லை.இதே நிலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டோல் பிளாசாக்களிலும் உள்ளது. "கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் பணம் கேட்டால் அசிங்கமாக திட்டுகின்றனர். வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்து விட்டு 2,000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு தப்பி விடுவோம் என்கின்றனர். உயிருக்கு பயந்து கட்சிக் கொடி கட்டிய வாகனங்களிடம் பணம் வசூலிப்பதில்லை. பணம் தராமல் செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதில்லை. அதை சேகரித்தால் ஏன் பணம் வசூலிக்கவில்லை என மேல் அதிகாரிகள் கண்டிக்கின்றனர். பணம் கேட்டால் வண்டியில் வருபவர்கள் உதைக்கின்றனர். இப்பிரச்னையில் நாங்கள் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறோம்' என, டோல் பிளாசா ஊழியர்கள் தெரிவித்தனர்.


சென்னை பை-பாஸ் சாலையில் உள்ள டோல்கேட் ஊழியர்கள் கூறும் போது "சுங்கவரி செலுத்துவதில் பொதுமக்கள் எந்த பிரச்னையும் செய்வதில்லை. கட்சிக்காரர்கள் தான் தகராறு செய்கின்றனர். கட்சியினரின் வாகனங்கள், வரி வசூலிக்கும் இடத்தில் நிற்காது. அதையும் தாண்டி, கேட் போடப் பட்டிருக்கும் இடத்திற்கு அருகே சென்று நிறுத்திவிட்டு, சத்தமாக "ஹாரன்' அடிப்பர். ஊழியர்கள் கேட்டை திறந்துவிடாவிட்டால், அசிங்கமாக திட்டுவதும், இறங்கி வந்து அடிப்பதும் வாடிக்கை. இந்த வகையில், தினசரி, சராசரியாக 100 முதல் 150 வாகனங்கள் வரை சுங்கவரி செலுத்தாமல் செல்கின்றன. அனைத்து கட்சிகளும் இதில் அடக்கம்' என்றனர்.


பல கோடி ரூபாய் இழப்பு! தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பை-பாஸ் சாலை டோல்கேட்டில் மட்டுமே ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய், அரசியல் கட்சியினரால் சுங்க வரி இழப்பு ஏற்படுகிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கார்களுக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்ல ஐந்து இடங்களில் 165 ரூபாய் வரை சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. தினசரி 500 கட்சிக் கொடி கட்டிய வாகனங்கள், இச்சாலையில் சுங்கவரி செலுத்தாமல் செல்வதாக, டோல் பிளாசா ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் தினசரி 82 ஆயிரம் ரூபாயும், ஆண்டிற்கு மூன்று கோடி ரூபாயும் வரி இழப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட டோல்கேட்களில் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வரை அரசியல் கட்சியினரால் வரி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த சுமை பொதுமக்களின் தலையில் தான் வந்து விழும். சுங்கவரி வசூலிப்பதால், சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் வாகனங்களின் தேய்மான செலவும், எரிபொருள் செலவும் குறைகிறது. இதை கணக்கிட்டு பார்த்தால், சுங்கவரி கட்டணம் ஒரு பெரிய விஷயம் இல்லை என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், அரசியல்வாதிகளின் அடாவடியினால், எதிர்காலத்தில், சாலை மேம்பாட்டு திட்டங்களில் தனியாரின் முதலீடு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அரசு பஸ்கள் வரி பாக்கி!வரி செலுத்தாததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டோல்கேட்டை கடந்து சென்ற அரசு பஸ்களை ஜி.எம்.ஆர்., நிறுவனத்தினர் நிறுத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், "வரி செலுத்தி விடுகிறோம். அதுவரை பஸ்களின் பதிவு எண்களை பதியுங்கள்' என்று போக்குவரத்து கழக டெப்போ இயக்குனர்கள், மேலாளர்கள் கூறினர். இதனால், தற்போது சுங்கச்சாவடிக்கு நான்கு கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை செயலர், போக்குவரத்து துறை செயலருக்கு ஜி.எம்.ஆர்., நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் உள்ள டோல்கேட்டில் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் ( டி.டி.பி.எல்) நிறுவனத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இரண்டு கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. சென்னை - புதுச்சேரி சாலையில் மரக்காணம் புத்துப்பட்டு அருகே தமிழ்நாடு சாலை பராமரிப்பு கழகம் (டி.என்.ஆர்.டி.சி) சார்பில் இயங்கும் டோல்கேட்டிலும் கட்சி மாநாடுகள் நடக்கும் போது சில பிரச்னைகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


போலீஸ் "கப்சிப்'...!டோல் பிளாசாக்களில் ஏற்படும் பிரச்னைகளில், போலீசாரின் நடவடிக்கை குறித்து டோல் பிளாசா ஊழியர்கள் கூறுகையில், "ஒரு கட்சிக்காரர் மீது எந்த ஒரு புகார் கொடுத்தாலும் போலீசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. "கட்சிக் கொடியோடு வருபவரிடம் கட்டணம் கேட்கும்போது டோல்கேட் ஊழியர்களுக்கும், அந்த அரசியல்வாதிக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அந்த சமயத்தில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தால் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக கட்டப் பஞ்சாயத்து செய்து அனுப்பி விடுகின்றனர். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுத்தால் மற்றவர்கள் தகராறு செய்வதற்கு தயங்குவர். போலீசார் இதை செய்யாமல் விடுவதே அரசியல்வாதிகள் கட்டணம் செலுத்தாமல் செல்வதற்கு காரணம். டோல்கேட்களில் ஊழியர் களிடம் தகராறு செய்யும் அரசியல்வாதிகள் மீது போலீசார் தக்க நட வடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும்,' என்றனர்.

யார் வீட்டு பணம் ?

கோவை:""உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவாகி உள்ளது,'' என்று, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவான, ஜூன் 23 அன்று, பந்தலில் இருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம். அன்று மாலை நடந்த அலங்கார ஊர்திகளின் எழிலார் பவனியை, சாலையின் இரு புறமும் நின்று கண்டு களித்தோரின் எண்ணிக்கை ஐந்து லட்சம்.ஜூன் 24 முதல் 26 வரை, மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் தினமும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். பொதுக்கண்காட்சியை மணிக்கு 3,000லிருந்து 4,000 பேர் வரை பார்வையிட்டனர். நான்கு நாட்களில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரில், 129 கட்டுரைகளும், 34 கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

மாநாட்டில் கலந்து கொண்ட அறிஞர்கள் 3,100 பேருக்கு சிறப்பு மலர் வழங்கப்பட்டன. மக்கள் 2,300 பேர், விலை கொடுத்து வாங்கியுள்ளனர். பல்வேறு ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்கள், கணக்கில் கொள்ளப்படவில்லை.தமிழ் இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை 110. மாநாட்டில் பதிவு பெற்று பங்கேற்றவர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற 200 பேரையும் சேர்த்து இம்மாநாட்டில் 500 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். இணைய மாநாடு சிறப்பு மலரில், 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பொதுக்கண்காட்சிக்கு வந்த மக்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தினமும் இணைய கண்காட்சியையும் பார்வையிட்டனர். தினமும் ஒரு முகப்பரங்கம் என்ற அளவில் நடந்த நான்கு முகப்பரங்கங்களில், ஒவ்வொன்றிலும் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அரசால் மானியம் வழங்கப்பட்ட உணவுக் கூடங்களில், நான்கு லட்சம் பேருக்கு 30 ரூபாய்க்கு சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு அறிஞர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் 2,605 பேர், 92 ஓட்டல்களில் உள்ள 1,642 அறைகளில் தங்கியிருந்தனர்.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளுக்காக நேரடிச் செலவாக 68 கோடி ரூபாய் செலவானது. இந்த மாநாட்டையொட்டி, கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், புதிய சாலைகள், இணைப்புச்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கு 243 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நடந்த ஆய்வரங்கங்களில், 239 அமர்வுகளில் 55 பொருண்மைகளில் 913 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டுக்காக, 50 வெளிநாடுகளில் இருந்து 840 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் கட்டுரை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 152.இலங்கையிலிருந்து 38, மலேசியாவிலிருந்து 23, சிங்கப்பூரிலிருந்து 22, அமெரிக்காவிலிருந்து 14, கனடாவிலிருந்து 11, இங்கிலாந்திலிருந்து 9, ஜெர்மனியிலிருந்து 5, ஆஸ்திரேலியாவிலிருந்து 4, மொரீஷியசிலிருந்து 3 என்ற எண்ணிக்கையில் அறிஞர்கள் வந்து கட்டுரை சமர்ப்பித்தனர்.

இவற்றைத் தவிர்த்து, பிரான்ஸ், சீனா, செக் குடியரசு, ஹாங்காங், கிரீஸ், நெதர்லாந்து, பின்லாந்து, ஜப்பான், நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இங்கு வந்து, கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.பேட்டியின்போது, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கனிமொழி எம்.பி., மாநாட்டு சிறப்பு அலுவலர் அலாவுதீன், மாவட்ட ஆட்சியர் உமாநாத், கோவை மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

பட்டியலும், பாராட்டும்:நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முதல்வர் கருணாநிதி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார். பேட்டியைத் துவக்கும் முன், அனைத்து பத்திரிகையாளர்களையும் பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்த முதல்வர், "வணக்கம், வாழ்த்துக்கள், நன்றி' என்றார்.

ஜனாதிபதி, கவர்னர், மத்திய அமைச்சர்கள் துவங்கி, மாநாட்டுப் பந்தல் அமைத்த பந்தல் சிவா வரையிலும் நீளமாக பெயர்ப் பட்டியலை வாசித்து, அத்தனை பேருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார் முதல்வர். குறிப்பாக, காவல்துறையினருக்கு நன்றி கூறிய அவர், ""சிறு பிரச்னை கூட எழாத அளவுக்கு 11 ஆயிரம் பேரைக்கொண்டு பாதுகாப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக காவல்துறையினர் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

சிறப்பாக நன்றிக்குரியவர்கள் என்று பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரைக் குறிப்பிட்டு புன்னகைத்தார். எல்லாரையும் விட, அமைதியோடும், மகிழ்ச்சியோடும் இந்த மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் முதல்வர்.

எங்கே போனது மனிதாபிமானம்

பல நாட்கள் சாப்பிடாததால், தோல் போர்த்திய எலும்புக்கூடாய், தவழ்ந்து செல்லக்கூட வழியில்லாமல், யாரையும் உதவிக்கு அழைக்க சக்தி இல்லாமல், அழுக்கு சட்டை, கைலியுடன், மதுரை அரசு மருத்துவமனையில், "யாராவது காப்பாற்றவார்களா' என்று 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஜீவன், வயிற்றுக்கும், தொண்டைக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தது.

சாப்பாடு டோக்கன் வழங்கும் இடத்தில், யாரோ இவரை நேற்று முன் தினம் அனாதையாக வீசிவிட்டு சென்றுள்ளனர். யிர்களை காப்பாற்ற வேண்டும் என்று போராடும் இம்மருத்துவமனையில், உயிருக்கு போராடிய அந்த ஜீவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. மனிதாபிமானம் எங்கே போனது?