கண்ணசைவில் களி நடனம் கண்ட
கற்பனை காதலெல்லாம்,
கால் நூற்றாண்டு கடந்தால்
காணாமல் போவதுண்டு...
உடலின்றி உயிர் சார்ந்த
பெண்மையின் கண்மை
கரையும் வேளையில்
கலங்கிய விழிகள்
காற்றில் அனுப்பும் ஒலிகளை
உள் வாங்கி உணர
ஊற்றென பெருகும்
உன்மத்த காதலே!
உயிர் உள்ள வரை
உடன் வரும் காதலாம்....
No comments:
Post a Comment