நீல வான ஓடையில்
நீந்தி விளையாடிய நிலவொன்று
மித்ந்து வந்த மேகத்தில்
மோகம் கொண்டு அதனுள்
மோகித்து மறைந்தது;
மறைந்த நிலவு
கரைந்து கரைந்து
விண்மீன்களை உருவாக்க,
மோகம் தெளிந்த மேகமோ
நிலவை விட்டு விலக
முழு நிலவானது
மூன்றாம்பிறையாக
நிர்சலனமின்றி தோன்றியது;
நிர்மல வானில்
மூன்றாம் பிறையை
ரசித்துக் கவிபாடும்
கவிஞன் வரும் வரை
முழுவதும் கரைந்து
அம்மாவாசை வந்து விட்டால்
பாவம் அந்த நிலாவென்று
அழுதழுது கரைந்தது வானம்...
No comments:
Post a Comment