நட்பினை நினைவு படுத்த
நாட்காட்டியில் நாளுளதாமே!
நான் அதை மறந்து விட்டேன்...
அகத்தீயில் எரிகையில்
புறமிருந்து எனை காத்த
புன் செய் விளை நிலமே!
உனை நான் மறந்து விட்டேன்....
பிள்ளை மொழி கேட்ட என்னை
பித்தனாக்கி பிறழ வைத்த
தங்க தமிழ் மொழியே!
உனை என்றோ மறந்து விட்டேன்...
என் சித்தம் கலங்கிடாது
நித்தம் நனைத்த
நிலவொளியே!
உனை கூட மறந்து விட்டேன்....
பாசமென்னும் பாசக்கயிற்றால்
பன் முறை உயிர் குடித்தத்
தென்றலே!
உனையும் தான் மறந்து விட்டேன்...
ஓ! மறந்து விட்டேன் பார்த்தாயா?
மரணம் எனை தழுவி
மாதம் ஒன்று ஆனதையே!!
No comments:
Post a Comment