[ஒருவர் ஒரு பொண்ணை விரும்புகிறார்...அந்த பொண்ணுக்கும்
அவரை பிடிக்கும்...ஆனால் அவர் அவளுக்கு அண்ணன் முறை..
அது தெரிந்து அந்த பெண்ணின் உணர்வுகள்]
காதலுக்கு கண்ணில்லையென்று
எனக்கு தெரியும்,
உறவு முறையும் இல்லையென
நீ சொல்லி தான் தெரியும்...
அழகாய் இருக்கிறாய்
என் அடி மனதில் இனிக்கிறாய்
ஆறடி எரிமலையாய்
என் ஆயுள் நனைக்கிறாய்...
மனம் திறந்து சொல்லாமல்
மறைமுகமாய் உணர வைத்தாய்
உயிரும் உடலும் உறைந்தாலும்
என் உள்ளம் மட்டும் உதற வைத்தாய்...
தாமதித்த காரணத்தால்
தங்கத்தை மறுக்க முடியாது
தங்கையென்னும் அரிதாரத்தில்
நான் அழுதது உமக்கு தெரியாது...
மறுபிறவி ஒன்றிருந்தால்
மறுபடியும் பிறந்திடுவோம்
அத்தணை உறவு எதிர்த்தாலும்
அவனியிலே ஜெயித்திடிவோம்...
No comments:
Post a Comment