மங்கையின் புன்னகை
மார்கழி பனிக்காற்று....
மழலையின் புன்னகை
மயக்கிடும் தேனூற்று....
அன்னையின் புன்னகை
அன்பெனும் நீரூற்று...
அதை உணர்ந்திட்டால்
நம் மனதிலே
ஆனந்த பூங்காற்று...
காற்றும் கடலும்
புன்னகைக்க
கரை தொட்டாடும்
அலை மிக அழகு...
அந்தி வெயிலின்
புன்னகையிலே
ஆறோடும் நீர் அழகு...
பொன் நகையின்
விலையேற்றத்தில் பெண்ணே!
உன் புன்னகையோ
மிக மிக அழகு....
No comments:
Post a Comment