காதல்
இரு மனம் கலந்து
வெளிவரும் உணர்வு
இரவெல்லாம் அழுதால்
அதிலேதோ தவறு...
காதல் என்ன கத்தரிக்காயா
சமைத்து ருசி பார்க்க?
கண்களுக்குத் தெரியாத
கண்ணீர் துளிகள்...
காயாத நினைவுகளின்
காய்ந்து போன வடுக்கள்
காலச்சக்கரத்தில் சிதைப்பட்டு
கன்றி போன காவியம்...
பல சச்சரவுகளிடையே
சமாதியாகி போன
என் காதலுணர்வை
நீ...
மலர்வளையம் வைத்து
மறுபடியும் உயிரூட்ட
உணர்கிறேன் புது வலி,
உள்ளமெல்லாம் உயிர் வலி...
No comments:
Post a Comment