காதல் வெள்ளோட்டத்தில்
கால் நூற்றாண்டுகள் கடந்தும்
கண்ணாமூச்சி ஆடுகின்றதே
நம் காதல்.....
என் கண்களில் தேடினாய்
உன்னை - உன்
மனக்கண்களில் கண்டேன்
என்னை....
நம் காதல் தேசத்தில்
இலையுதிர் காலம் கூட
இள வேனிற் பூக்களை
தருகிறதே....
நரையோடி நடை தளர்ந்தும்
கடலோடு நான் கரைந்தாலும்
கலையாத பனியாக
உதிராத மலராக
உன் உள்ளில் நானிருப்பேன்
ஓரு காதல் தவமாக.........
No comments:
Post a Comment