Powered By Blogger

Wednesday, July 21, 2010

யோசனை மஞ்சு வாண்டு தான் !!


ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் : ராமராஜன்


கடைசி வரை ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றார் ராமராஜன். கலைமகள் கலைக்கூடம் தயாரிக்கும் படம் ‘மேதை’. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிக்கும் இந்தப் படத்தை என்.டி.ஜி.சரவணன் இயக்குகிறார். தினா இசை. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனும் வெளியிட, பார்த்திபனும், இயக்குனர் ஹரியும் பெற்றுக் கொண்டார்கள். விழாவில் ராமராஜன் பேசியதாவது:

ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு வளர்ந்தவன். போராடி சினிமாவில் ஜெயித்தேன். 50 படங்களில் நடித்து பெற வேண்டிய புகழை ‘கரகாட்டக்காரன்’ என்ற ஒரே படத்தில் பெற்றேன். வருடத்துக்கு 8 படங்களில் நடித்த நான். இப்போது 8 வருடங்களில் ஒரு படம் நடித்திருக்கிறேன். இடையில் நிறைய படங்களில் கேரக்டர் ரோலில் நடிக்க கேட்டார்கள். மறுத்து விட்டேன். எம்.ஜி.ஆர் மாதிரி கடைசி வரை ஹீரோவாகத்தான் நடிப்பேன். படமே இல்லாமல் வீட்டில் சும்மா இருந்தாலும் பரவாயில்லை. எனது பாலிசியை மாற்ற மாட்டேன். இவ்வாறு ராமராஜன் பேசினார்.


No comments:

Post a Comment