அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தினை டைரக்டர் ஜெயம் ராஜா இயக்குகிறார். நாயகியாக ஜெனிலியா நடிக்க உள்ளார். பிரமாண்ட அளவில் தொடக்க விழாடை நடத்த திட்டமிட்டிருக்கிது வேலாயுதம் டீம். இந்நிலையில் வேலாயுதம் படத்தின் கதை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீ-மேக் பிரியர்கள். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது காலை வாரிவிட்டாலும் தொடர்ந்து ரீ-மேக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஜெயம் ராஜாவுக்கு ரீ-மேக்தான் ரொம்ப ராசி. இப்போது அவர் வேலாயுதம் படத்திற்காக தேர்ந்தெடுத்திருக்கும் கதையும் ரீ-மேக்தான் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம் வட்டாரம்.
மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் இயக்கிய 'ஆசாத்' என்ற படத்தை தழுவித்தான் வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ண கலவைதான் இந்த ஆசாத் படம் என்று தெலுங்கு பட வட்டாரம் சொல்கிறது. அப்போ... படத்தோட கதை என்னவாக இருக்கும்னு புரியுதா?!

No comments:
Post a Comment