Powered By Blogger

Saturday, January 8, 2011

தியேட்டர் கிடைக்காமல் திண்டாடும் விஜய்யின் காவலன்

no theatre for vijays kaavalan சமீபகாலமாக விஜய் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். குறிப்பாக, விஜய் நடித்து வெளிவந்த "சுறா" படம் சரியாக ஓடாததால், தியேட்டர் அதிபர்கள் விஜய்யிடம் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். மேலும் அவருடைய படத்தை திரையிட விட‌மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் விஜய்‌யின் அடுத்தபடமான "காவலன்" படத்தை திரையிட தியேட்டர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

டைரக்டர் சித்திக்கின் இயக்கத்தில், விஜய்-அசின் நடித்த "காவலன்" படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. முதலில் இப்படம் இம்மாதம்(டிசம்பர்) வெளிவருவதாக இருந்தது. ஆனால் கமலின் "மன்மதன் அம்பு" படம் இம்மாதம் 23ம்‌தேதி ரிலீஸ் ஆவதால், "காவலன்" படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதற்கும் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் ஏற்கனவே கலைஞரின் "இளைஞன்", கார்த்தியின் "சிறுத்தை", தனுஷ்-ன் "ஆடுகளம்" உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு புக்ஆகி விட்டதால் "காவலன்" படத்தை திரையிட, தியேட்டர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment