காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை. ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது. மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.

No comments:
Post a Comment