Thursday, January 27, 2011
Sunday, January 23, 2011
Saturday, January 8, 2011
தியேட்டர் கிடைக்காமல் திண்டாடும் விஜய்யின் காவலன்
டைரக்டர் சித்திக்கின் இயக்கத்தில், விஜய்-அசின் நடித்த "காவலன்" படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. முதலில் இப்படம் இம்மாதம்(டிசம்பர்) வெளிவருவதாக இருந்தது. ஆனால் கமலின் "மன்மதன் அம்பு" படம் இம்மாதம் 23ம்தேதி ரிலீஸ் ஆவதால், "காவலன்" படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதற்கும் பிரச்சனை வந்துவிட்டது. காரணம் ஏற்கனவே கலைஞரின் "இளைஞன்", கார்த்தியின் "சிறுத்தை", தனுஷ்-ன் "ஆடுகளம்" உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு புக்ஆகி விட்டதால் "காவலன்" படத்தை திரையிட, தியேட்டர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
காவலன் பஞ்சாயத்து! படம் பிடிக்கலன்னா பணம் வாபஸ்?
இதுதொடர்பாக விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், செயலாளர் மதுரை செல்வின் ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ் திரைப்பட தொழிலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது. அப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டுத்தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு. நஷ்டம் உனக்கு என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையை தகர்க்கும் செயல்.
தயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட்ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடியாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை. நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பதுபோல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தை திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா? காவலன் திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது.
திரைப்பட புகைவண்டி தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
Wednesday, January 5, 2011
காவலனை பார்த்து கண் கலங்கிய சென்சார் போர்டு!
காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர் கிடைக்காத கவலையில் இருக்கும் தயாரிப்பு தரப்பிற்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலைக் கொடுத்திருக்கிறது. விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை. ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது. மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்கலங்கி பாராட்டியிருக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை நோக்கி விஜய் பேசும் வசனங்கள் அனல் கக்குகின்றனவாம். ஆனால் எங்கேயும் கத்தரி போட முடியாத அளவுக்கு கதையோடு ஒன்றிய வசனங்களாக இருப்பது ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகளை பார்த்த சென்சார் அதிகாரிகள் அவர்களை அறியாமலேயே கண் கலங்கி விட்டார்களாம். இந்த தகவல் காவலன் தயாரிப்பு தரப்பிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறதாம்.
Subscribe to:
Posts (Atom)