என் ஊர்
"தி.மு.க.வி்ன் தாலாட்டுத் தொட்டில் திருச்சி !"
''பழமையை இழக்காமல் புதுமை பூசிக்கொள்ளும் அழகிய நகரம் எங்கள் திருச்சி. பிறந்தது, தவழ்ந்தது, ஓடி விளையாடியது, படித்தது, அவசர நிலைக் காலத்தில் 'மிசா’ சட்டத்தில் கைதாகும் வரை வாழ்ந்தது என என் வாழ்வில் எல்லாமே திருச்சிதான். அங்கு கீழ ஆண்டார் வீதிக்காரன் நான்!
திருச்சியில் உள்ள அனைத்து சாமிகளின் திருவீதி உலாக்களும் எங்கள் வீதியிலும் பயணிக்கும். மலைக்கோட்டையின் இரண்டாவது பிராகார வீதி இது. தைப் பூசம் அன்று இரவு முழுவதும் தெருவே விழித்து இருக்கும். விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணிக்கு பட்டாம்பூச்சிக் கூட்டம் பறக்கத் தொடங்கி 10 மணிக்கு அடங்கிவிடும். அருகில் உள்ள சாவித்திரி வித்தியாசாலா பள்ளி, சீத்தா லட்சுமி ராமசாமி கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களின் கூட்டம்தான் அது. நாங்கள் படித்த இ.ஆர். மேல்நிலைப் பள்ளிக்கும் அதுதான் வழி!
பள்ளிக் காலம் வரை அம்மாதான் என்னை வழிநடத்தினார்கள். திருவரங்கம் கோயிலுக்கு நடத்தியே அழைத்துப் போவார்கள். பழைய காவிரிப் பாலத்தில் நடக்கும்போது கீழே சுழித்துக்கொண்டு ஓடும் நீரின் சுழற்சி தந்த அச்சம் இன்னும் நெஞ்சில் இருக்கிறது. திருச்சியின் கோயில்கள் சிறப்பு மிக்கவை மட்டும் அல்ல; வித்தியாசமானவையும் கூட! புராண சிறப்புமிக்க தாயுமானவர் கோயில், நீர் சூழ்ந்த திருவானைக்கா, வானுயர்ந்த திருவரங்கம், திறந்த நிலையில் இருக்கும் வெக்காளி அம்மன் கோயில் என இங்கு அமைந்து இருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் தனி மகத்துவம் உண்டு!
வரலாற்றோடு மிக நெருக்கமான ஊர் திருச்சி. குறிப்பாக, திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் உண்டு. பெரியார், தான் பிறந்த மண்ணுக்கு இணையாக நேசித்த ஊர் இது. 1938-ல் பட்டுக்கோட்டை அழகிரி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கிய இடம். தேர்தலில் போட்டியிடுவது என தி.மு.க. முடிவு எடுத்த இடம். அண்ணா முதல்வராகி முதன்முதலாக வந்த இடம். கலைஞர் முதன்முதலாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் என திராவிட இயக்க வரலாற்றில் திருச்சிக்கு அழுத்தமான முத்திரைகள் உண்டு!
என் வாழ்வின் வசந்த காலம், கல்லூரிக் காலம். குப்புசாமி, சேதுராமன், சின்னசாமி, ராமலிங்கம், தமிழிசை அரசன், பாபு, ஜான், சோமு என நண்பர்கள் கூட்டத்தோடு திருச்சியை என் கால்களால் அளந்த காலம். அந்நாட்களில் சிங்காரத் தோப்பில் 'மெட்ரோ ஹோட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. மூணு சமோசா, ஒரு டீ 30 பைசா. சாயங்கால நேரங்களில் அங்கு சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்தால், இரண்டாவது சுற்றை நாங்கள் முடிக்கும்போது கடை வீதியில் கடைகளின் கதவுகளை அடைக்கத் தொடங்கி இருப்பார்கள். பாதி நேரம் வீதியில், பாதி நேரம் திரையரங்குகளில் என்று கழிந்த காலம் அது. 'அருணா’விலும் 'பிளாஸா’விலும் ஆங்கிலப் படங்கள் ஓடும். 'கெயிட்டி’யில் இந்திப் படங்கள் ஓடும். 'முருகனி’ல் பழைய படங்கள் ஓடும். பின்னாளில் ஊர் உருமாறியபோது 'ராஜா’, 'ஜுபிடர்’, 'பிரபாத்’, 'பிளாசா’ தியேட்டர்கள் இடிக்கப்பட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவை வெறும் சினிமா கொட்டகைகளா... வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்த இடங்கள் அல்லவா?
ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் வீசி விளையாடும் நிகழ்ச்சி வாணப்பட்டரை மாரியம்மன் தேரோட்டத்தின் போது நடக்கும். அப்போது எல்லாம் காலை 7 மணிக்குக் கிளம்பும் தேர் ஆண்டார் வீதிக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மதியம் 2 மணி ஆகிவிடும். இப்போது எல்லாம் காலை 10 மணிக்கே முழு பிராகாரமும் சுற்றி முடித்து தேர் நிலை திரும்பிவிடுவதாகச் சொல்கிறார்கள். காரணம், ஊர் கூடி தேர் இழுப்பது இல்லை. இயந்திரங்கள் உந்திச் செல்கின்றன. தோழமையோடு மஞ்சள் நீர் வீசி விளையாடுகிற ஆண்களும் பெண்களும் இப்போது இல்லை!
ஊர் உருவம் மாறியிருக்கிறது. விலகாமல் தொடர்கின்ற அம்மாவின் நினைவுகளைப்போலவே, நான் பிறந்து வளர்ந்த வசந்தராயம் பிள்ளை சந்து ஆறாம் இலக்கம் உள்ள வீடு மட்டும் இன்னும் அப்படியே உருமாறாமல் இருக்கிறது. அதேபோலவே, எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் என் ஊரின் மீது எனக்கு உள்ள பற்றும் அன்பும் மாறாது!
தங்கள் ஊர் மீது பலருக்கும் ஆசை இருக்கலாம். நான்கொண்டது காதல். அது அழியாதது. பலர் அறியாதது!
Thursday, April 28, 2011
Thursday, April 7, 2011
cricket
எட்டு வருடங்களுக்கு முன்பு கோரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்த மஹேந்திர சிங் டோனியின் கையில் இப்போது உலகக் கோப்பை!
100 கோடிக்கும் மேலான இந்திய கிரிக்கெட் ரசிகர் களின் கனவை நனவாக்கிய தருணத்தில், டோனியின் முகத்தில் அத்தனை தெளிவு, பிரகாசம். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த விஷயங்கள் என்ன? இதோ ஆறு அசத்தல் காரணங்கள்...
டோனியின் தலைமை!
''டோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்கு உரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடும் முயற்சி எடுப்பவர்''-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி யில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் சொன்னது இது. கபில் சொன்ன மாதிரியே இறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார். ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் டோனி சிறந்த கேப்டன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. வெற்றி பெறப்போகிறோம் என்கிற தருணத்தில்கூட, எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் அமைதியாக இருந்தது அவரது பக்குவத்தைக் காட்டியது. வெற்றி பெற்றதும் சச்சினை முன்னால் செல்லவிட்டு, அமைதியாகப் பின்னால் சென்றது அவரது முதிர்ச்சியைக் காட்டியது!
சச்சின் டெண்டுல்கரின் அனுபவம்!
சச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. ''100-வது சதம், மூன்றா வது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு'' என்று பல சாதனைகள் ஒவ்வொரு போட்டியின்போதும் சச்சினைத் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையா டாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். ''தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்குச் சந்தோஷம். வெற்றி அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்'' என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்திருக்கிறார்கள் இளம் வீரர்கள்!
டீம் ஸ்பிரிட்!
இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது இவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் அறிவார்கள். டோனி கேப்டனாகப் பொறுப்பு ஏற்கும்போது, யுவராஜ் சிங் அவருக்கு சீனியர். சச்சின் அணியில் இருக்கிறார். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர் களுக்கு மதிப்பு அளித்து, ஜூனியர் வீரர் களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்று மையை வளர்த்தார் டோனி. போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது டீம் டூர் போவது, அவ்வப்போது பார்ட்டி வைப்பது என டீம் மெம்பர்களை ஒருங்கிணைத்தார் டோனி. போட்டியின்போது ஒவ்வொரு பந்துக்கும் முனாஃப் பட்டேலுக்கு ஓடோடி வந்து அறிவுரைகள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஜாகீர்கான். விராட் கோலிக்கு எப்படி ஆட வேண்டும் என்று களத்தில் நின்றே வழிகாட்டிக்கொண்டே இருந்தார் சச்சின். இந்த டீம் ஸ்பிரிட்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது!
இளம் வீரர்களின் ஆதிக்கம்!
உலகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின். சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோலி பிறந்தார். ''21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்துகொண்டு இருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது என்பது பெரிய விஷயமா என்ன?''- உலகக் கோப்பையை வென்றவுடன் யோசிக்காமல் பேசிய விராட் கோலி யின் வார்த்தைகளில் தெரிந்தது அவரது கிரிக்கெட் காதல்!
கடுமையான பயிற்சி!
கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் சேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போது தான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே? அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றினார் கிரிஸ்டன்!
ஜாகீர் கானின் எழுச்சி!
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!
1999 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இப்போது ஆஸ்திரேலியாவுக்குப் பதில் இந்தியா அந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. 'இனி எப்போதுமே இந்தியாதான் நம்பர் ஒன் அணியாக இருக்க வேண்டும்!’ என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகனின் ஆசை. டோனி தலைமையிலான அசத்தல் அணிக்கு அதைச் சாதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது!

'' 'தமிழர்களே... தமிழர்களே!
ஸ்பெக்ட்ரம் தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்!
உஷார் உடன்பிறப்பு
'டால்மியா’ தங்கவேலு... இவரது பேச்சும் மூச்சும் கறுப்பு சிவப்புத£ன்! சேலம் மாவட்டத்தில் உள்ள செட்டிச்சாவடி கிராமம் தங்கவேலுவின் சொந்த ஊர். கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து, காலாட்டியபடியே தி.மு.க-வுக்காக வாய்ஸ் கொடுக்கிறார்!
'' 'தமிழர்களே... தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகத்தான் நான் மிதப்பேன். நீங்கள் அதில் ஏறிப் பயணம் செய்யலாம். கவிழ்த்துவிட மாட்டேன்! தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் பாறையில் தூக்கி அடித்தாலும் சிதறு தேங்காயாகச் சிதறுவேன். அதை எடுத்து நீங்கள் சாப்பிடலாம்!’ - இது ஏதோ தலைவர் கலைஞரின் வார்த்தை விளையாட்டோ, திரைப்பட வசனமோ அல்ல. அவரது வாழ்க்கை. இதுதான் இந்தத் தமிழ்நாட்டின் 60 ஆண்டு கால சரித்திரம்!
தலைவர் கலைஞருடன் ஒப்பிடுவதற்கேனும் வேறு ஒரு தலைவர் மற்ற கட்சிகளில் உண்டா? பதவிக்காக மட்டும் தி.மு.க இல்லை. எமர்ஜென்சி என்னும் எமன் இந்தியாவை வளைத்தபோது, தமிழகத்தை அந்தக் கொடுங் கரம் வளைக்காமல் தடுத்தவர் கலைஞர். பதவி ஆசை இருந்து இருந்தால், அன்றைய பிரதமர் சொன்னதற்குத் தலையை ஆட்டிக்கொண்டு தமிழக முதல்வராக அவரால் தொடர்ந்திருக்க முடியும். 91-ம் ஆண்டு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, மறுபடியும் கலைஞர் ஆட்சியைக் கலைத்தார்கள். வெளியூர்ப் பயணத் தின்போது ஹோட்டல் அறையைக் காலி செய்யும் மனநிலையில் எந்தக் கவலை யும் இல்லாமல் முதல்வர் நாற்காலியில் இருந்து இறங்கி யவர் கலைஞர். அதனால்தான் 'தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும், அமைச்சராகப் பணியாற்று என்றாலும், இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன்தான் என் தம்பி கருணாநிதி!’ என்றார் பேரறிஞர் அண்ணா!
இப்படிப்பட்ட தலைவரை ஸ்பெக்ட்ரம் பிரச்னையை மட்டுமே வைத்துக் காலி செய்துவிடலாம் என்று சில கருங்காலிகள் திட்டமிடுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் பொறுத்தவரை, அது ஊழலே கிடையாது. பொதுமக்கள் அனைவருமே சகாய விலையில் செல்போன் வசதியை உபயோகிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாகப் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதால் ஏற்பட்ட சிறு சிக்கல். 1.76 லட்சம் கோடியை ஆ.ராசா அபேஸ் செய்துவிட்டார் என்பதுபோலப் பலர் பொறாமையில் புகார் சொல்கிறார்கள். அதாவது, இந்த அளவுக்கு லாபம் அடைந்து இருக்க முடியும் என்பதுதான் அந்தக் கணக்கே தவிர, மற்றபடி யாரும் கன்டெய்னரில் அடுக்கி, கப்பலில் அவ்வளவு கோடி கரன்ஸியைக் கடத்திவிடவில்லை. அம்பானி சகோதரர்களது மேஜையில் இருந்த செல் போனை, கிழங்கு விற்கிற கிழவியின் இடுப்பில் மாட்டிவிட்டது எங்களது தயாநிதி மாறனும் ஆ.ராசாவும் அல்லவா?
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான். பெரிதாக ஒரு நல்லது நடக்கும்போது, சின்னக் குறைகளைக் கண்டுகொண்டு கைது செய்யக் கூடாது!
ஜெயலலிதா ஊழல் செய்யாதவரா... பணம் பதுக்காதவரா? பணத்தைப் பார்த்தால், முகத்தைத் திருப்பிக்கொள்பவரா? பெங்களூரில் நடக்கும் வழக்கு அவர் உத்தமி அல்ல என்பதைச் சொல்லும். 24 வயதுப் பையனை வளர்ப்பு மகனாகத் தத்து எடுத்து, வளமான கல்யாணம் நடத்தி, பல கோடி மதிப்புள்ள நகைகளை மாட்டி, அவரும் அவரது தோழியும் நடந்து வந்த காட்சியை இன்னமும் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.
வீட்டுக்கு வீடு இலவச டி.வி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய்க்கு ரேஷன் கடையில் அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் - இவை எல்லாம் கொண்டுவந்த கலைஞரை தமிழ்நாட்டு மக்கள் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரமைக் காட்டி ஏமாற்றப் பார்க்கிறார்.
எம்.ஜி.ஆர். காலத்தில்கூட கிராமங்கள் இரட்டை இலையின் கோட்டையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அனைத்துக் கிராமங்களிலும் உதயசூரியன் மட்டுமே இருக்கிறான். இந்த மாற்றத்தை கலைஞர் எப்படிச் சாதித்தார்? அவர்களுக்கு நல்லது செய்ததன் மூலமாக, மக்களே மனம் மாறிவிட்டார்கள். கிராமத்து மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால்கூட 'மகராசனா இரு’ என்று மனசு நிறைந்து வாழ்த்துவார்கள். அந்த அளவுக்கு நல்லவர்கள். நன்றி மறக்காதவர்கள். அந்த மக்கள் கேட்காமலேயே வாரி வழங்கி இருக்கும் கலைஞரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடுவார்களா?
எதிரிகளை வீழ்த்த வேண்டுமானால், பலசாலிகளை ஒன்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார். கலைஞரின் வியூகங்களை ஆயிரம் ஜெயலலிதாக்கள் வந்தாலும் வீழ்த்த முடியாது!''

Subscribe to:
Posts (Atom)